சிறுபான்மை மக்களின் சார்பாக உப ஜனாதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் - புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவை சமர்ப்பித்தது மலையக மக்கள் முன்னணி - News View

About Us

About Us

Breaking

Sunday, February 21, 2021

சிறுபான்மை மக்களின் சார்பாக உப ஜனாதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் - புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவை சமர்ப்பித்தது மலையக மக்கள் முன்னணி

இலங்கையில் சிறுபான்மை இனத்தை சார்ந்த ஒருவர் ஒருநாளும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியாது என்பதால், சிறுபான்மை இனங்களான வடகிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்களுக்கு அவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் மூவினங்களுக்கான உப ஜனாதிபதிகள் மூவர் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினர் மத்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணி புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவை முன்வைத்துள்ளது.

இலங்கையின் புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகளை மலையக மக்கள் முன்னணி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியல் நிபுணர் குழுவிடம் கையளித்தது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன், முன்னணியின் பிரதித் தலைவர் ஏ.லோரன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா, உப தலைவர் சிவலிங்கம் சதீஸ்குமார், மலையக மகளிர் முன்னணியின் பிரதித் தலைவி திருமதி சுவர்ணலதா இளங்கேஸ்வரன், பிரதிச் செயலாளர் திருமதி.கிருஸ்ணவேனி விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த முன்மொழிவுகளில் பின்வரும் முக்கிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த முன்மொழிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு 

மலையக மக்களின் பொருளாதார தொழில் ரீதியான வருமான மார்க்கங்களை உறுதிப்படுத்துவதற்கு, பெருந்தோட்ட பொருளாதாரத்தை மீறுசீரமைப்பு செய்து தனியார் கம்பனிகளுக்கு பதிலாக தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் வழி தோண்டல்களையும், சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுதல்.

கடந்த காலங்களில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட இனக்கலவரங்களால் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவ்விதமான இன பாகுபாடு, ஓரங்கட்டல்களிலிருந்து விடுபடும் வகையில் சமூக பாது காப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

அரச சேவை, பொது சேவையிலும் மலையக மக்கள் உள்ளீர்க்கப்படுவதோடு, அரசாங்க தனியார் நிறுவனங்களின் சேவைகளை, பலன்களை அனுபவிக்கும் வகையில் அரசாங்க சேவையில் அவர்களின் இன விகிதாச்சாரத்திற்கேற்ப சேவைகள் வேலைவாய்ப்புக்கள் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் சிறுபான்மை இனத்தை சார்ந்த ஒருவர் ஒருநாளும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியாது. எனவே இலங்கையின் சிறுபான்மை இனங்களான வடகிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்களுக்கு அவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் மூவினங்களுக்கான உப ஜனாதிபதிகள் மூவர் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினர் மத்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட வேண்டும்.

இவ் ஜனாதிபதிகளுக்கு செனட்சபையை தலைமை தாங்கும் பொறுப்பும், சில அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். பெயரலவிற்கான உப ஜனாதிபதிகளாக இருக்க கூடாது. 

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் தேசிய பட்டியல் உறுப்பினர்களில் 25 வீதத்தினராவது மூன்று சிறுபான்மை இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக இருக்க வேண்டும்.

தற்போதைய தேர்தல் முறைமை பற்றிய குறைபாடுகளும் இது சிறுபான்மை மக்களை பாதுகாக்க முடியாத நிலைபற்றியும் பலரும் சுட்டிகாட்டி இருப்பதால் சிறுபான்மை இனங்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்பவும் அவர்கள் பிராந்திய அடிப்படையில் செறிவாகவும், சில பகுதிகளில் பரவளாகவும் வாழ்வதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேரிய ரீதியானதும், பிராந்திய அடிப்படையிலும், பாராளுமன்ற மாகாண உள்ளுராட்சி அடிப்படையிலான அரசியல் பிரதிநிதித்துவத்தை அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.உட்பட இன்னும் பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment