தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் கடந்த 30ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றிருந்தது.
இதன்போது, சிறிதரன் எம்.பி கருத்து தெரிவித்த போது, வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா களமிறக்கப்பட வேண்டுமென்றார். சீ.வீ.கே.சிவஞானம் அதை ஆதரித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லையென நேற்று முன்தினம் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
ஊடகங்கள்தான் இப்படியொரு குழப்பத்தை ஏற்படுத்தின, தமிழ் தேசியக் கூட்டமைப்பினதோ, தமிழரசுக் கட்சியினதோ முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் பல விடயங்களை கலந்துரையாடினோம், மாகாண சபையை குறித்தும் கலந்துரையாடினோம், ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி தீர்மானங்கள் எடுக்கவில்லை.
No comments:
Post a Comment