பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று நடைபெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் பஞ்ச்குர் என்ற இடத்தில் இருந்து சிந்து மாகாணத்தின் கராச்சிக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பஸ் குவெட்டா- கராச்சி நெடுஞ்சாலையில் உதால் என்ற இடத்தில் வரும்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 5 பெண்கள், 2 குழந்தைகள், 7 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் உதால் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் கராச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அதிகமான பனிப்பொழிவு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment