அரசியல் கைதிகள் யாரும் சிறைச்சாலைகளில் இல்லை என்கிறார் பிரதமர் மஹிந்த - காணிகள் தொடர்பில் யாருக்கும் கேள்வி எழுப்ப முடியாது என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 10, 2021

அரசியல் கைதிகள் யாரும் சிறைச்சாலைகளில் இல்லை என்கிறார் பிரதமர் மஹிந்த - காணிகள் தொடர்பில் யாருக்கும் கேள்வி எழுப்ப முடியாது என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியல் கைதிகள் என யாரும் இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சானக்கியன், நாட்டில் சிறைச்சாலைகளில் சிறைக் கைதிகள் எத்தனை பேர் இருக்கின்றனர்?, நாட்டில் இருக்கும் இராணுவ முகாம்கள், சிறைக் கைதிகளை விடுவிக்க இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடமிருக்கும் தனியாருக்கு சொந்தமான காணிகளின் பிரமானம் தொடர்பாக கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையின் தண்டனைக் கோவைச் சட்டம் அல்லது நாட்டில் செயற்பட்டு வரும் வேறு எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் விளக்கமறியல் கைதிகள் அல்லது சிறைக் கைதிகளில் அரசியல் கைதிகள் என யாரும் இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை.

அத்துடன் மாவட்ட மட்டத்தில் இராணுவத்தினருக்கு இருக்கும் காணி அளவு தொடர்பில், தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு பதில் வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

அதனைத் தொடர்ந்து தனியாருக்கு சொந்தமான காணிகள் பாதுகாப்பு பிரிவுக்கு கீழ் தொடர்ந்து இருப்பது தொடர்பாக பிரதமருக்கு பதிலாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதிலளிக்கையில், யுத்தத்துக்கு பின்னர் வடக்கு கிழக்கில் அரச மற்றும் பொது மக்களுக்கு சொந்தமான 97 வீதமான காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 

தேசிய பாதுகாப்புக்காகவே எஞ்சிய வீதத்தினை வைத்திருக்கின்றோம். தேசிய பாதுகாப்புக்கு பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் காணிகள் தொடர்பில் யாருக்கும் கேள்வி எழுப்ப முடியாது என்றார்.

No comments:

Post a Comment