கோரிக்கைகளை சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடும் முன்வைக்கலாம், ஆனால் இறுதித் தீர்மானம் அரசாங்கமே எடுக்கும் - கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

கோரிக்கைகளை சீனா உள்ளிட்ட எந்தவொரு நாடும் முன்வைக்கலாம், ஆனால் இறுதித் தீர்மானம் அரசாங்கமே எடுக்கும் - கெஹெலிய ரம்புக்வெல்ல

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களுக்கான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு சீனா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுக்கும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அவை குறித்த இறுதித் தீர்மானம் அரசாங்கத்தினாலேயே எடுக்கப்படும். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அப்பால் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இணைய வழியூடாக நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

கேள்வி : கொழும்பு இலங்கை வங்கி கட்டடம் உள்ளிட்ட இரு கட்டடங்கள் சீன அரசாங்கத்தால் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீன அரசாங்கத்தால் இது போன்று ஏதேனும் கட்டடங்கள் கோரப்பட்டுள்ளனவா?

பதில் : அபிவிருத்தி திட்டங்களுக்காக கோரிக்கைகளை முன்வைப்பதற்கான சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. ஆனால் அவற்றை வழங்குவதா இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்கும். இவை தொடர்பில் அரசாங்கம் பின்பற்றும் கொள்கையுள்ளது.

அந்த கொள்கைக்கு அமையவும் சுபீட்சத்தின் நோக்கு கொள்ளை திட்டத்திற்கு அமைய செய்படுவோமேயன்றி அதனை மீறி எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad