உலகின் மிக உயரமான நாய் என கின்னஸ் உலக சாதனை படைத்த நாய் இறந்தது.
இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த நாயின் உயரம் 3 அடி மற்றும் 4 அங்குலமாகும். இந்த நாய் நின்றால், 7 அடி 4 அங்குலம் உயரமாகும்.
கிரேட் டேன் வகையைச் சேர்ந்த இந்த நாய் எட்டரை வயதிலேயே இறந்துள்ளது. இந்த வகையைச் சேர்ந்த நாய்கள் எட்டு முதல் பத்து வயது வரை உயிர் வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரெடி மிக உயரமான நாய் மட்டுமல்ல. மிகப் பெரிய மனம் கொண்ட, மிக அதிகமான அன்பு கொண்ட நாயும்தான் என அதன் உரிமையாளர் கிளயார் ஸ்டோமன் கூறினார்.
அதன் மரணம் வருத்தமளித்தாலும், பிரெடி மிகவும் நேசிக்கப்பட்டது என்பது மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment