வடக்கு, கிழக்கில் 97 வீதமான காணிகள் மீள ஒப்படைப்பு என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர - News View

Breaking

Post Top Ad

Thursday, February 11, 2021

வடக்கு, கிழக்கில் 97 வீதமான காணிகள் மீள ஒப்படைப்பு என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர

வடக்கு மற்றும் கிழக்கில் 97 வீதமான நிலங்கள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

முப்பது ஆண்டுகள் இடம்பெற்ற யுத்தத்தை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் 97 வீதமான நிலங்கள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 

100 இல் 3 வீதமான காணிகள் மாத்திரமே தற்போது தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகிறது என்றார்.

சமஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad