வவுனியாவில் 7 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

வவுனியாவில் 7 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் நேற்றையதினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அவரைக் காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் இன்று (09) காலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதேவேளை குறித்த சிறுவனின் புத்தகபை குறித்த சிறுவனின் சக மாணவனின் வீட்டிற்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒமந்தை பொலிஸார் மோப்ப நாய் சகிதம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சிறுவன் அவ்வீட்டில் காணப்பட்ட கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நவ்வி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வரும் 07 வயதுடைய ப.அபிசாந் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவரது தாயார் வெளிநாடொன்றில் வசித்து வரும் நிலையில் தந்தை மற்றும் அப்பம்மாவுடன் குறித்த சிறுவன் வசித்து வந்துள்ளார். சம்பவ தினம் தந்தையார் வீட்டில் இருக்கவில்லை.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad