கொரோனா தொற்றால் 102 வயதான வயோதிபப் பெண் மரணம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 9, 2021

கொரோனா தொற்றால் 102 வயதான வயோதிபப் பெண் மரணம்

காலியில் 102 வயதான வயோதிபப் பெண் ஒருவர் தனது வீட்டில் நேற்று திங்கட்கிழமை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் போது நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

றுகுணு பல்கலைக்கழக தடயவியல் மருத்துவ விரிவுரையாளர் வைத்தியர் யு.சி.பி. பெரேரா தெரிவிக்கையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிகவும் வயதான நபராக இருந்திருப்பார், மேலும் தொற்றுக்குள்ளாகி வீட்டிலேயே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப சடலம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என நகர திடீர் மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad