மக்களே..! அவதானம் : பொலிஸாரென கூறி வர்த்தகரொருவரின் வீட்டில் 5 இலட்சம் ரூபா கொள்ளை - News View

Breaking

Post Top Ad

Saturday, February 6, 2021

மக்களே..! அவதானம் : பொலிஸாரென கூறி வர்த்தகரொருவரின் வீட்டில் 5 இலட்சம் ரூபா கொள்ளை

(செ.தேன்மொழி)

பொலிஸார் என்று கூறி வர்த்தகரொருவரின் வீட்டில் 5 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கட்டுகஸ்தொட்ட பகுதியில் கடந்த 3 ஆம் திகதி பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட நான்கு பேர் கொண்ட குழுவினர், வர்த்தகர் ஒருவரின் வீட்டில் 5 இலட்சம் ரூபாய் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸார் என்று கூறிக் கொண்டு வருகைதரும் நபர்கள் தொடர்பில் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும். 

பொலிஸார் என்று தெரிவித்து சிவில் உடையில் எவரேனும் சுற்றிவளைப்புக்கு வந்திருந்தால் அவர்களது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்பதற்கு பொதுமக்களுக்கு உரிமையுண்டு எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad