சர்வதேச அழுத்தத்தை அடுத்து பலஸ்தீனர்களுக்கு 5000 கொரோனா தடுப்பு மருந்தை இஸ்ரேல் வழங்கியுள்ளது.
இஸ்ரேல் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்திய போதும் பலஸ்தீனர்கள் தடுப்பு மருந்து பெறுவதில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் வாழும் பலஸ்தீர்கள் நிலை குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டது.
இந்தப் பகுதிகளில் இருக்கும் பலஸ்தீனர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கும் பொறுப்பு இஸ்ரேலுக்கு இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ.நா நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
எனினும் 1990 களில் எட்டப்பட்ட அமைதி உடன்படிக்கையின்படி பலஸ்தீனர்களுக்கு தாம் பொறுப்பேற்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல் உதவிக்கான எந்தக் கோரிக்கையும் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
பலஸ்தீன முன்னிலை சுகாதாரப் பணியாளர்களுக்காகவே தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் 9.3 மில்லியன் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினருக்கு முதல் சுற்று தரப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment