இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள், 45 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளைக் கொண்ட வாகனமொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (25) காலை பாணந்துறை மத்திய குற்றத் தடுப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு இராணுவ உறுப்பினர்களில் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்பதோடு, மற்றைய சந்தேகநபர் தற்போது இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சிப்பாய் என இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் இராணுவ நிர்வாக கடமைகளுக்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டது எனவும் இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, அவர்கள் மேற்கொண்டுள்ள ஒழுக்கமற்ற நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா குறித்த இருவருக்கு எதிராகவும், தற்போதுள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைய, உச்சபட்ச சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக, இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
ஹொரணை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சோதனையின்போது வேன் ஒன்றில் 45 கிலோ மற்றும் 376 கிராம் ஹெராயின் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹாண தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment