இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவாகியுள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற தெரிவுக்குழு தேர்தலில் 5,162 வாக்குகளைப் பெற்ற அவர் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட குவேரா டி சொய்ஷா 2,807 வாக்குகளை பெற்றிருந்தார்.
அந்த வகையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) 26ஆவது தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள 85 நிலையங்களில் இத்தேர்தல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக, சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய போட்டியின்றி மீண்டும் தெரிவாகியுள்ளார்.
2021/2022 காலப் பகுதிக்கான செயற்குழு தெரிவே தற்போது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment