எத்தியோப்பியாவில் போர் நீடிக்கும் டைக்ரே பிராந்தியத்தில் இரு முகாம்கள் அழிக்கப்பட்ட பின் அதில் இருந்த 20,000 அகதிகள் வரை காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் அண்டை நாடான எரிட்ரியாவைச் சேர்ந்த அகதிகளே ஹிட்சாட்ஸ் மற்றும் சிமல்பா என்ற இரு முகாம்களிலும் தஞ்சமடைந்திருந்தனர். எனினும் டைக்ரேவில் கடந்த நவம்பரில் ஏற்பட்ட மோதலால் இந்த முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான எரிட்ரியர்கள் அடைக்கலம் பெற்றிருந்த இந்த முகாம்கள் அழிவடைந்திருக்கும் செய்மதிப் படங்கள் கடந்த ஜனவரி மாதம் வெளியாகின.
ஐ.நா அமைப்பினால் நடத்தப்படுகின்ற மாய்-அயினியில் இருக்கும் மற்றொரு முகாமிற்கு சுமார் 3,000 பேர் வந்தடைந்ததாக அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.
பல அகதிகளும் துப்பாக்கிச் சண்டைக்கு இடையே சிக்கி இருப்பதோடு அவர்கள் எரிட்ரிய படைகளால் எரிட்ரியாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக அகதிகளின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, கிராண்டி தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பிய மத்திய அரசு, டைக்ரே பிராந்திய அரசுக்கு எதிராக தொடுத்த போரில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment