2 ஆயிரத்து 755 கிலோ கழிவு தேயிலைத் தூள்களுடன் இருவர் கைது! - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 23, 2021

2 ஆயிரத்து 755 கிலோ கழிவு தேயிலைத் தூள்களுடன் இருவர் கைது!

பூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றிச் செல்லப்பட்ட 2 ஆயிரத்து 755 கிலோ கழிவு தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

அக்கரபத்தனை, போபத்தலாவ பகுதியிலிருந்து குறித்த கழிவுத் தேயிலை தூள் கம்பளைக்கு கொண்டுசெல்லப்படவிருந்தது. பூண்டுலோயாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் வைக்கப்பட்ட பின்னர் கம்பளைக்கு கடத்தவே திட்டமிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்கு நேற்று (திங்கட்கிழமை) கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இவர்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலைத் தூளும் பூண்டுலோயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad