இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பை வழங்கியுள்ளார்.
இலங்கை முழுவதும் உள்ள சிறைகளிலிருந்தே இவ்வாறு 146 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியுள்ளார்.
இவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளில் தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவு செய்தவர்களும், 50 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களும், சிறார் குற்றங்களுக்காக கைதாகி, தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன் அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதும் உடனடியாக அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்ளென்றும் சிறைச்சாலைகள் ஆணையகத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நோய் மற்றும் கிறிஸ்மஸைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31, நவம்பர் 20 மற்றும் ஜனவரி 08 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின மன்னிப்பின் போது விடுவிக்கக் காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சிறைத் துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment