தாய்நாட்டிற்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாத செயற்பாடுகளைத் தோற்கடிக்கும் வகையிலான உறுதியான கொள்கையை வகுத்து செயற்பட்டிருக்கிறோம். எத்தகைய சவால்கள் வந்தபோதிலும் ஒருபோதும் நாம் தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை. தற்போது உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பாரிய சவாலாக மாறியிருக்கிறது. இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு நாம் இப்போது வலுச்சேர்த்திருக்கின்றோம். எதிரிகளைப் போன்றே கொரோனா வைரஸ் பரவலை முறியடிப்பதற்கும் நாமனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம். தாய்நாட்டின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அனைவரையும் நாம் இத்தருணத்தில் நினைவு கூருகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 73 ஆவது சுதந்திர தினத்துக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிப்பட்டுள்ளதாவது, இலங்கைப் பிரஜைகள் அனைவரும் நாட்டின் மீதான உயர் அபிமானத்துடனேயே 73 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகின்றனர். சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக எம்மவர்களால் முன்னெடுக்கப்பட்ட அர்ப்பணிப்புடனான போராட்டங்களை நினைவு கூருவதற்கான வாய்ப்பை இது வழங்குகின்றது.
போரின் மூலம் மாத்திரமன்றி அரசியல், சமய, கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளின் ஊடாகவும் போராடி சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட வரலாற்றை இலங்கையர்கள் கொண்டுள்ளனர். அவ்வாறு பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை மேலும் அர்த்தமாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே தற்போது அவசியமானதாக உள்ளது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தேசியவாதத்திற்கு மதிப்பளிக்கும் பொருளாதாரக் கொள்கை ஒன்றினூடாக நாம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசென்றிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் இடம்பெற வேண்டிய மறுசீரமைப்புக்களை இனங்கண்டு, சுபீட்சத்திற்கான நோக்கு அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக இந்த சுதந்திரம் மேலும் அர்த்தமுடையதாக மாற்றப்பட்டுள்ளது.
எமது வரலாற்றைப் பொறுத்த வரையில் தாய்நாட்டிற்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு தீவிரவாத செயற்பாடுகளைத் தோற்கடிக்கும் வகையிலான உறுதியான கொள்கையை வகுத்து செயற்பட்டிருக்கிறோம். எத்தகைய சவால்கள் வந்தபோதிலும் ஒருபோதும் நாம் தாய்நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை.
தற்போது உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பாரிய சவாலாக மாறியிருக்கிறது. இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு நாம் இப்போது வலுச்சேர்த்திருக்கின்றோம். எதிரிகளைப் போன்றே கொரோனா வைரஸ் பரவலை முறியடிப்பதற்கும் நாமனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றுபடுவோம்.
தாய்நாட்டின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அனைவரையும் நாம் இத்தருணத்தில் நினைவு கூருகின்றோம்.
No comments:
Post a Comment