அவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Saturday, January 16, 2021

அவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்

ஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் முகம்கொடுத்துள்ளனர்.

சுமார் 14,480 கிலோ மீற்றர் தூரம் பறந்து வந்த இந்தப் புறா மெல்பர்ன் நகரில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பெயரில் ஜோ என்று அழைக்கப்படும் அது, ஒரு பந்தயப் புறா என்று கூறப்படுகிறது. அது கடந்த ஒக்டோபர் மாதம், அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு பந்தயத்தின்போது காணாமற்போனது. அதன் உரிமையாளர் அலபாமா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

அவுஸ்திரேலியாவின் பறவைகளுக்கும் கோழித் துறைக்கும் அந்தப் புறா நேரடி உயிரியல் அபாயத்தை ஏற்படுத்துவதாக அந்நாட்டு வேளாண்மைத் துறைப் பேச்சாளர் கூறினர். 

அது அமெரிக்காவிலிருந்து வந்திருந்தால், அதைக் கருணைக் கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று வேளாண்மைத் துறை தெரிவித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad