ஜெனிவாவுக்கான வரைபைத் தயாரிக்க மூவர் அடங்கிய குழு - சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

ஜெனிவாவுக்கான வரைபைத் தயாரிக்க மூவர் அடங்கிய குழு - சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன்

ஜெனீவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான வரைபு ஒன்றினை தயாரிப்பதற்கு மூவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனைக்குழு கூட்டம் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று மதியம் தொடக்கம் மாலை வரை நடைபெற்றது.

குறித்த ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் தமிழர் தரப்பு ஜெனீவா விவகாரத்தை கையாள்வதற்கான வரைபு தயாரித்தல் தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய மூவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்ட நிலையில் ஜெனிவா கூட்டத் தொடரில் முன்வைக்க வேண்டிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது. இதன்போதே வரைபு தயாரிப்தற்கான குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதில் தமிழ்த் சிதேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், வடக்கு - கிழக்கைச் சேர்ந்த சிவில் அமைப்பு பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad