அரசாங்க நிதி பற்றிய குழுவில் இரு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று காலை கூடிய பாராளுமன்ற அமர்வின்போது அறிவித்தார்.
அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் குமார வெல்கம ஆகியோர் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோப் குழு உறுப்பினர்களான ஹேஷா விதானகே மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோரின் இராஜினாமாவினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment