சந்தை பிரச்சினையினால் பொத்துவிலில் கைகலப்பு : இராணுவம், பொலிஸார் தலையிட்டு முடிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Sunday, January 3, 2021

சந்தை பிரச்சினையினால் பொத்துவிலில் கைகலப்பு : இராணுவம், பொலிஸார் தலையிட்டு முடிக்கப்பட்டது

நூருள் ஹுதா உமர்

பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம். வாசித் சந்தை பங்கிட்டு முறையில் பாரிய முறைகேட்டை நிகழ்த்தியுள்ளதாக கூறி பாதிக்கப்பட்ட வியாபரிகள் இன்று காலை சுலோகங்களை ஏந்தி கொண்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

பல தசாப்தங்களாக பொத்துவில் பொதுச் சந்தையில் வியாபாரம் செய்து வந்த எங்களுக்கு புதிய சந்தை கட்டிடத்தில் ஒழுங்கான இடங்களை தவிசாளர் வழங்கவில்லை என்றும் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட போது தவிசாளருக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை என்பதாலும், அவர் இவ்வாறு நடந்து கொள்வதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர். 

புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் சந்தையில் 52 கடைகள் உள்ளதாகவும் அதில் எங்களுக்கு பொருத்தமான கடைகள் ஒத்துக்கப்படவில்லை, என்றும் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நியாயம் கிடைக்கவில்லையாயின் நஞ்சருந்தி இறக்கப் போவதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். 

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் திடீரென புகுந்த ஒரு குழுவினர் ஆர்ப்பட்டக்காரர்களுடன் சண்டையில் ஈடுபட்டவுடன் இரு சாராருக்கும் கைகலப்பு மூண்டது. 

ஆர்ப்பாட்டத்தில் கலகம் விளைவித்தவர்கள் தவிசாளரின் கூலிப்படையினர் என அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசந்த குமாரசரி அடங்கிய பொலிஸ் படை, இராணுவம், பாதுகாப்பு படை சம்பவ இடத்தில் அமைதியை உண்டாக்கினர். 

பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியலய சுகாதார தரப்பினர் கொரோனா சூழ்நிலையை கவனத்தில் கொண்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய போது கலகக்காரரகள் கலைந்து சென்றனர். 

இங்கு வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம். தாஜுதீன், எம்.எஸ்.எம். மர்சூக் தனது பதவியின் முடிவை தொட்ட தவிசாளரின் இந்த செயல் கண்டிக்கதக்கது. 

அத்துடன் கடந்த தேர்தலில் தனக்கு அந்த மக்கள் வாக்களிக்க வில்லை என்பதால் எம்.பி பதவி கிடைக்கவில்லை எனும் ஏக்கத்தில் உள்ள செயலே இது. அவரின் ஆதரவாளர்களுக்கு இந்த சந்தையை பிரித்து கொடுத்துள்ளார். இதன் மூலம் அப்பாவி மக்கள் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர். 

இந்த சந்தை விடயம் தொடர்பில் சபையில் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இவ்வருட பாதீடு தோல்வியடைந்த விரக்தியில் அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவே இது என்றனர்.

No comments:

Post a Comment