சாய்ந்தமருது வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் அஜ்வத் கடமைகளைப் பொறுப்பேற்றார் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 2, 2021

சாய்ந்தமருது வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் அஜ்வத் கடமைகளைப் பொறுப்பேற்றார்

நூருள் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் ஏ.எல்.எம்.அஜ்வத் இன்று (சனிக்கிழமை) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், வைத்திய துறையில் 15 வருடங்களுக்கு முன்னரே தரம் 01 க்கு தகுதி பெற்ற இப்பிரதேசத்தின் சிரேஷ்ட வைத்தியர் என்பதுடன், நீண்டகால அனுபவமுடையவரும் சுகாதார அமைச்சின் கீழுள்ள பல்வேறு நிறுவனங்களில் பல பதவிகளை வகித்தவருமான வைத்தியர் அஜ்வத், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை என்பவற்றின் வைத்திய அத்தியட்சகராக கடந்தகாலங்களில் கடமையாற்றியுள்ளதுடன் இறுதியாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றியவர். 

கடமையேற்பையொட்டி சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியதாக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வு இன்று வைத்தியசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க பிரதி தலைவரும் சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர் சங்க தலைவருமான எம்.எஸ்.எம்.முபாறக், செயலாளர் எம்.ஐ.எம்.சதாத், அபிவிருத்திச் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்களான சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபை தலைவர் எம்.எம்.சலீம் (ஷர்க்கி), மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.ஏ.கபூர் (ஜெமீல்) மற்றும் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் அத்துடன் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஊழியர்களின் கொவிட் தொற்று பாதுகாப்பு கருதி வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பாதுகாப்பு முக கவசங்கள் பொறுப்பதிகாரி அஜ்வத் அவர்களினால் ஊழியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

மேலும், வைத்திய துறையில் சிறப்பான பணிகளைச் செய்துவரும் இப்பிரதேச மக்களின் நன்மதிப்பைப் பெற்ற வைத்தியர் எம்.எச்.கே.ஸனுஸ் காரியப்பர் நிரந்த இடமாற்றம் பெற்று 2021.01.01 முதல் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment