இஸ்லாமிய அடிப்படைவாதம் மத்தரசா பாடசாலைகளில் போஷிக்கப்படுவதால் அதனை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் - அத்துரலிய ரத்தன தேரர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 6, 2021

இஸ்லாமிய அடிப்படைவாதம் மத்தரசா பாடசாலைகளில் போஷிக்கப்படுவதால் அதனை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் - அத்துரலிய ரத்தன தேரர்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இஸ்லாமிய அடிப்படைவாதம் மத்தரசா பாடசாலைகளிலே போஷிக்கப்படுகின்றது. அதனால் மத்தரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும். அத்துடன் அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான எந்த வேலைத்திட்டங்களையும் இதுவரையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது என எமது மக்கள் சக்தி உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொதுத் தேர்தலில் இந்த அரசாங்கத்துக்கு 67 இலட்சம் மக்கள் வாக்களித்தது, மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகும். குறிப்பாக ஒரு நாடு ஒரு சட்டம் என்ற பிரசாரத்தை நாங்கள் முன்னெடுத்து சென்றோம்.

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கான கலந்துரையாடல்கள் கூட ஆளும் தரப்பு கூட்டங்களில் இடம்பெறுவதில்லை. இது தொடர்பில் அரசாங்க தரப்பினர் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

விசேடமாக பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

விவசாய நடவடிக்கைகளுக்காக உள்நாட்டில் உரம் தயாரிக்கப்பட வேண்டும். எமக்கு இருக்கும் வளங்களை பயன்படுத்திக் கொண்டு தேவையான உரம் தயாரிக்கலாம். அரசாங்கத்துக்கு அதனை செய்ய முடியாவிட்டால் அந்த பொறுப்பை எமக்கு வழங்கினால் நாங்கள் செய்வோம். 

அத்துடன் ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கொள்கையை நிலைநாட்டுவதாக தெரிவித்தாலும் இன்னும் அது ஏற்படுத்தப்படவில்லை. மத்தரசா பாடசாலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பாேஷிப்பது மத்ரசா பாடசாலைகளாகும். கல்வி அமைப்புக்கு அப்பாற்பற்று செயற்படும் இந்த மத்தரசா பாடசாலைகள் சட்டவிராேதாகும். அதனால் மத்ரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும். ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் அறநெறி பாடசாலைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை.

அதேபோன்று இஸ்லாம் மாக்கத்தைவிட்டு மதம் மாறியவர்களை கொலை செய்ய வேண்டும் என குர்ஆனில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் 10ஆம் ஆண்டும் இஸ்லாம் அச்சுப்புத்தகத்தில் பொறிக்கப்பட்டிருப்பதே பாரிய விடயமாகும். 

அந்தளவுக்கு நாங்கள் குருடர்களாகவே இருந்திருக்கின்றோம். பங்களாதேஷ் நாட்டிலும் பார்க்க எமது நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாத ஆடை மற்றும் உணவு பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர் என்றார்.

No comments:

Post a Comment