அமெரிக்க வரலாற்றில் பதிவான மிகப் பெரிய தொடர் கொலையாளி மரணம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 1, 2021

அமெரிக்க வரலாற்றில் பதிவான மிகப் பெரிய தொடர் கொலையாளி மரணம்

அமெரிக்க வரலாற்றில் பதிவான மிகப் பெரிய தொடர் கொலையாளி என அழைக்கப்படும் சாமுவேல் லிட்டில் தனது 80ஆவது வயதில் காலமானார்.

லிட்டில் கலிபோர்னியா மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை மரணித்தார் என்று சீர்திருத்த மற்றும் மறுவாழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மூன்று பெண்களை கொலை செய்த குற்றத்திற்காக அவர் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்தார். ஆனால் 1970 தொடக்கம் 2005 வரை தாம் 93 பெண்களை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.

அவர் பாலியல் தொழிலாளர்கள் அல்லது போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் போன்ற இலகுவாகச் சிக்கக் கூடியவர்களை இலக்கு வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான லிட்டில் குத்துகளை விட்டு கழுத்தை நெரித்தே பலநேரங்களில் கொலைகளில் ஈடுபட்டிருப்பதால் கொலை நேர்ந்ததற்கான வெளிப்படையான ஆதாரங்கள் தெரியாமல் போயிருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment