இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
அவருக்கு கொரோனா தொடர்பில் மேற்கொண்ட Rapid Antigen சோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, கொரோனா தொற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்காவது தொற்றாளராக, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து அவரது பணிக் குழாமைச் சேர்ந்த 10 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களான, தயாசிறி ஜயசேகர, ரஊப் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment