சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இரு வாரங்களுக்கு மேல் ஆகலாம் - சீனா - News View

Breaking

Post Top Ad

Friday, January 22, 2021

சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இரு வாரங்களுக்கு மேல் ஆகலாம் - சீனா

நூற்றுக்கணக்கான மீற்றர் நிலத்தடியில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை மீட்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் செல்லலாம் என சீன மீட்புக் குழுக்கள் கூறுகின்றன.

சீனாவின் கிழக்கு கடற்கரை நகரமான யந்தாய் புறநகரில் உள்ள ஹுஷன் தங்க சுரங்கத்திலேயே கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 22 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு வாரம் கழித்து அவர்களுள் 12 பேர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களுள் ஒருவர் கோமாவில் இருந்த நிலையில் உயிரிழந்து விட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 350 மீற்றர் (1,148 அடி) நிலத்தடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள போதிலும், மீட்புப் பணியாளர்கள் இதுவரை சிறிய துளைகளைத் துளைக்க மட்டுமே முடிந்துள்ளது. எனினும் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கான உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வழகின்றது.

சுமார் 600 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர், சம்பவ இடத்தில் 25 ஆம்பியூலன்ஸ்கள் காத்திருக்கின்றன, அதேபோல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், அதிர்ச்சி நிபுணர்கள் மற்றும் உளவியலாளர்கள் ஆகியோரும் காத்திருப்பில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad