மோதறை பொலிஸ் பிரிவு உள்ளிட்ட கொழும்பு, கம்பஹாவின் பல பகுதிகள் நாளை அதிகாலை முதல் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 3, 2021

மோதறை பொலிஸ் பிரிவு உள்ளிட்ட கொழும்பு, கம்பஹாவின் பல பகுதிகள் நாளை அதிகாலை முதல் விடுவிப்பு

நாளை (04) அதிகாலை 5.00 மணி முதல் கொழும்பில், கடந்த ஒக்டோபர் 22 முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மோதறை பொலிஸ் பிரிவு மற்றும் வாழைத்தோட்டம், பொரளை, மீரிஹான பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரு சில கிராம சேவகர் பிரிவுகள், தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் பிரதேசங்களின் நிலைமை தொடர்பில் கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வாழைத்தோட்டம் புதுக்கடை மேற்கு, புதுக்கடை கிழக்கு ஆகிய பிரதேசங்கள் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகள், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என, ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், கொவிட்‌-19 பரவலைத்‌ தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின்‌ பிரதானி, இராணுவத்‌ தளபதி லெப்டினன்‌ ஜெனரல்‌ ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,

கொழும்பு மாவட்டம் 
நாளை (04) மு.ப. 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் இடங்கள்

பொலிஸ் பிரிவுகள்
மோதறை/முகத்துவாரம்

கிராம சேவகர் பிரிவுகள்
வாழைத்தோட்டம்: புதுக்கடை மேற்கு
வாழைத்தோட்டம்: புதுக்கடை கிழக்கு
பொரளை: வனாத்தமுல்ல
மிரிஹான பொலிஸ் பிரிவில்: தெமலவத்த‌

கம்பஹா மாவட்டம் 
நாளை (04) மு.ப. 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்:

பேலியகொடை பொலிஸ்‌ பிரிவு
பேலியகொடவத்தை
மீகஹவத்த
பட்டிய வடக்கு
பேலியகொட கங்கபட: நெல்லிகஹவத்த, பூரணகொட்டு வத்த

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு
விலேகொட வடக்கு: ஶ்ரீ ஜயந்தி மாவத்தை

No comments:

Post a Comment