இதய சுத்தியோடு போராடுபவர்களை நையாண்டி செய்து நமது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடுவது கவலையளிக்கின்றது ! அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் டீ.எம். ஐயூப் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 10, 2021

இதய சுத்தியோடு போராடுபவர்களை நையாண்டி செய்து நமது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடுவது கவலையளிக்கின்றது ! அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் டீ.எம். ஐயூப்

நூருல் ஹுதா உமர்

இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் சார்பாக ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் பலதரப்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கின்ற போதும் ஒரு சிலர் மாத்திரமே இதய சுத்தியோடு ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்காக செயற்படுகின்றார்கள். அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் பிறந்த அரசியலில் முதிர்ச்சி கண்ட மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பாசறையில் பயிற்றப்பட்ட ஒரு சிறந்த அரசியல்வாதியாக தேசிய காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாவுல்லா இருப்பதை ஒட்டி மகிழ்ச்சியடைகிறேன் என அக்கரைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் டீ.எம். ஐயூப் தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில் மேலும், அரசியலில் இலாபம் தேடாமல் உண்மைக்கு உண்மையாக ஒரு விடயத்தை சாதிக்க எப்படிப்பட்ட வழிகளை கையாள வேண்டும் என்பதில் சாமர்த்தியமாக தனது பணியை செய்து கொண்டிருக்கின்றார் ஏ.எல்.எம். அதாஉல்லா. விமர்சனம் என்பது அரசியல்வாதிக்கு புரியதல்ல ஆனால் இதய சுத்தியோடு செயற்படுகின்றவர்களை நையாண்டி செய்யலாம் என எண்ணி நாம் நமது தலையில் மண்ணை அள்ளிப் போடுவது போல் முஸ்லிம்களை இன்னும் படுகுழியில் தள்ளும் ஒரு செயற்பாட்டை நாம் அறியாமல் செய்து கொண்டிருப்பது கவலையளிக்கின்றது.

நிபுணர் குழுக்களின் அறிக்கை இறுதியான அறிக்கை என்று அரசியல் தலையீடுகள் இருக்காது என்று முடிவெடுத்த பிற்பாடு நிபுணர் குழுவின் அறிக்கை அடக்கம் செய்யலாம் என்று கிடைக்கப்பெற்றுள்ளது. இலங்கை சட்டக் கோவையின் 222 சரத்தின் படி தொற்றுநோயால் மரணிக்கின்ற உடல்களை அடக்கவும் முடியும் எரிக்கவும் முடியும் என்ற சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்களின் உடல்களை அடக்க முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படி என்றால் பாராளுமன்ற சிறப்பு உரிமைகளை மீறி நிறைவேற்றப்பட்டிருக்கும் ஜனாஸாக்களை எரிக்க வேண்டும் என்ற கேசட் நோட்டிபிகேஷன் பிழையானது அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் கோவிட் -19 சம்மந்தமான தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்தில் நான் கொண்டு வருவேன் என்று அதாவுல்லா சத்தமான குரலில் சூளுரைத்தார். இதுதான் தலைமைத்துவப் பண்புகள் அரசியல் முதிர்ச்சி, பக்குவத்தை புடம் போட்டு காட்டும் ராஜதந்திர செயற்பாடாக பாராட்டக்கூடிய ஒரு தலைவனாக திகழ்கின்றார்.

முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றம் செல்பவர்கள் சட்ட ரீதியாகவும் அனுபவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முதுமானிகளாக வல்லுநர்களாக இருந்தால் மாத்திரமே நமது பிற்காலத்தில் உள்ள முஸ்லிம் சமுதாயம் நிம்மதியாகவும் சுமுகமாகவும் வாழக்கூடிய வழியை உருவாக்க முடியும்.

அதைவிட்டுவிட்டு தடியெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்பதுபோல் பாராளுமன்றத்தில் கூக்குரலிட்டால் பாதையை மறைத்து கோஷங்கள் செய்தால், ஊர்வலங்கள் சென்றால் அவர்தான் முஸ்லிம்களின் உரிமைக்காக சிறுபான்மையினரின் குரலாக என்று எண்ணி முஸ்லிம்கள் இன்னும் ஏமாந்து பள்ளத்தில் விழுகின்ற ஒரு செயலை ஒரு சில முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்னும் செய்து கொண்டுதான் இருக்கின்றது. தனது அரசியல் ஆசைகளுக்காக.!

ஆகையால் நாம் வாழும் நாடு பல்லின மக்கள் வாழும் நாடு அந்த அடிப்படையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இந்த நாட்டில் பெரும்பான்மை சமுதாயத்துடன் எப்படி வாழ வேண்டும் என்பதை நமது தலைமைகள் வழிநடத்த வேண்டும் இல்லை என்றால் கால ஓட்டத்தில் முஸ்லீம்களின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக மாறக்கூடிய சந்தர்ப்பத்தை முஸ்லிம் என்று பெயர் தாங்கிய அரசியல் தலைவர்கள் உருவாக்கிவிடுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment