வெலிகந்த, ரம்பேவ பிரதேச சபை தலைவர்கள் பதவி நீக்கம் - அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு - News View

Breaking

Post Top Ad

Saturday, January 2, 2021

வெலிகந்த, ரம்பேவ பிரதேச சபை தலைவர்கள் பதவி நீக்கம் - அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு

வெலிகந்த மற்றும் ரம்பேவ பிரதேச சபைகளின் இரண்டு தலைவர்களும் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அதிவிசேட வர்த்தமானியை வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் வௌியிட்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்படுவதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் கவிந்து அபேசூரியவும் ரம்பேவ பிரதேச சபையின் தலைவர் அஜித் பிரசன்ன தென்னகோனும் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரமராச்சியை நியமித்துள்ளதாக வட மத்திய மாகாண ஆளுநரால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad