ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடு? : ஜனாதிபதி தலைமையில் இறுதித் தீர்மானக்கூட்டம் இன்று - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடு? : ஜனாதிபதி தலைமையில் இறுதித் தீர்மானக்கூட்டம் இன்று

(ஆர்.ராம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதில் இலங்கை எத்தகையை நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவது என்பது தொடர்பான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இராஜங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, செயலாளர் ரியர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மற்றும், ஜனாதிபதியின் வெளிவிவகாரங்களுக்கான ஆலோசகர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டமானது மெய்நிகர் வழியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகவிருக்கும் சி.ஏ.சந்திரப்பெருமவும் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கான இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் தூதுவர்களும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்திற்கான பிரேரணை பிரித்தானியா, கனடா உள்ளிட்ட இணை அனுசரண நாடுகளால் இம்முறை கொண்டுவரவுள்ளதோடு இந்தப் பிரேரணைக்கான இணை அனுசரணையை இலங்கை அரசாங்கத்தினையும் வழங்குமாறும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கோரியபோதும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதை நிராகரித்தமையை வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் ரியர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad