கட்டுநாயக்க விமான நிலையத்தின் 11 பாதுகாப்பு பணியாளர்களுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 11 பாதுகாப்பு பணியாளர்களுக்கு கொரோனா

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தில் பணி புரியும் 11 பாதுகாப்புப் பணியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்கு வரத்து லிமிடெட் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் ஜா-எல பகுதியில் வசிப்பவர்கள் ஆவர்.

இந்நிலையில் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் தங்களது வீடுகளை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு படையினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த விமான நிலைய அதிகாரிகளின் மற்றொரு குழு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad