வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமான சேவைகளின் எண்ணிக்கை அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்கப்படும் என, விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு அழைத்து வரப்படுபவர்கள் அனைவரும் அரசாங்கத்தினால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும், கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தல் மையங்களில் (ஹோட்டல்களில்) தங்கியிருப்பது கட்டாயமானதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பான அர்ப்பணிப்பிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் கலந்துரையாடலுக்கு என்னை அழைத்தமைக்காக அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு நன்றி தெரிவித்துள்ள விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இளைஞர்களின் வேலையின்மைக்கு தீர்வு காண, எமது இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவது இன்றைய முக்கிய தேவையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment