குழிக்குள் மூழ்கிய மீனவர் மரணம் - தம்பி, பாட்டியின் தலைமுடியை பிடித்து காப்பாற்றிய சிறுவன் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 24, 2021

குழிக்குள் மூழ்கிய மீனவர் மரணம் - தம்பி, பாட்டியின் தலைமுடியை பிடித்து காப்பாற்றிய சிறுவன்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்னளப்பு மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் மீனவர்கள் இருவருக்கு இடம்பெற்ற சம்பவங்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் மற்றையவரின் சடலம் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு - பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு விழுந்து மூழ்கிய மீனவர் ஒருவர் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வந்தாறுமூலையில் வசிக்கும் பேதுறு சிவராசா (வயது 62) என்பவரே சேறும் சகதியும் நிறைந்த குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டவராகும்.

இவர் தனது மனைவி மற்றும் 9 வயது 13 வயதுடைய பேரப்பிள்ளைகள் இருவருடனும் வழமையாக மீன்பிடித் தொழில் செய்து வருபவர் என்றும் சம்பவ தினம் அந்தக் குடும்பத்தினர் பிரப்பம் வளைவுப் பகுதியிலுள்ள வீதியைக் கடந்தபோது அங்கு தண்ணீர் நிரம்பியிருந்த வீதியிலுள்ள ஆழமான குழிக்குள் சேற்றில் மூழ்கியுள்ளார்.

வீதியால் தனது 9 வயதுப் பேரனை சுமந்து கொண்டு சென்ற கணவர் வீதியில் இருந்த குழிக்குள் விழ பின்னால் வந்த மனைவியும் விழுந்துள்ளார்.

இதனை அறிந்த மூன்றாவதாக வந்த 13 வயதான பேரன் தனது தம்பியின் தலைமுடி நீருக்கு வெளியே தெரியவர அவரைப் பிடித்திழுத்து வெளியே கொண்டு வந்து விட்டு பாட்டியின் தலை முடியையும் பிடித்திழுத்து காப்பாற்றிவிட்டு பாட்டனாரைத் தேடிய பொழுது அவர் காணாமல் போயுள்ளார்.

சிறுவன் அப்பகுதியில் கூச்சலிட்டு அயலில் நின்றவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் தேடிய பொழுது சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad