போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? - கேள்வி எழுப்பினார் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? - கேள்வி எழுப்பினார் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்

(நா.தனுஜா)

உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூருவதில் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருக்கிறார். அவ்வாறெனில், எதிர்வரும் மே மாதம் எவ்வித அடக்குமுறைகளோ சட்ட ரீதியான தடைகளோ இன்றி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது நினைவுத் தூபியின் ஊடாக அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூருதல் என்ற போர்வையில் பயங்கரவாதிகளே நினைவு கூரப்படுகின்றனர் என்பதற்கான ஆதாரம் என்ன? 

அதேபோன்று போரின்போது உயிரிழந்தவர்களைத் தமிழர்கள் நினைவு கூருவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றால், கடந்த 2020 மே மாதம் உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூருவது ஏன் தடை செய்யப்பட்டது?

இவையனைத்திற்கும் மேலாக சரத் வீரசேகரவின் டுவிட்டர் பதிவின்படி, எதிர்வரும் மே மாதம் எவ்வித அடக்குமுறைகளோ, சட்ட ரீதியான தடைகளோ, இடையூறுகளோ இன்றி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

No comments:

Post a Comment