இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கரமநாயக்கவுக்கும் இடையில் தொலைபேசியில் பேச்சுவார்த்தையொன்று நேற்று நடைபெற்றுள்ளது.
இதன்போது, யாழ். நிலாவரை பகுதியில் திடீரென தொல்லியல் துறையினர் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்டவர்கள் வருகை தந்து தொல்லியல் அகழ்வாரச்சிகளை நடத்தியமை தொடர்பில் மாவை சேனதிராஜா கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அத்துடன், இந்த செயற்பாடானது மக்கள் மத்தியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், பதற்றமான சூழல்களை உருவாக்குவதாகவும் அவர் சுட்டிக்காடியுள்ளார்.
மேலும், குருந்தூர் மலை விடயம் தொடர்பாகவும் மாவை கேள்விகளை தொடுத்துள்ளார்.
அத்தோடு, யாழ். பல்கலைக்கழகத்தில் தொல்லியத்துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இருக்கும்போது பெரும்பான்மை சமூகத்தினரை மட்டும் பயன்படுத்தி நிலங்களை ஆக்கிரமிக்கும் வகையிலான செயற்பாடுகளை உடன் நிறுத்துப்படியும் கோரியுள்ளார்.
அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் விதுர, எதிர்வரும் காலத்தில் யாழ். பல்கலைக்கழக தரப்பினரையும் உள்ளீர்ப்போம் என இனம், மதத்தின் பெயரால் தொல்லியத்துறை செயற்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment