பண்டாரவளை - கினிகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பெண்ணொருவருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு கடந்த 15 ஆம் திகதி பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment