1,000 ரூபா சம்பள விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நழுவப்போவதில்லை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 17, 2021

1,000 ரூபா சம்பள விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நழுவப்போவதில்லை

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்புக்கு ஏற்ற நாட் சம்பள உயர்வு தொடர்பில் இம்மாதம் இறுதிக்குள் நல்ல பதில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் வழங்க வேண்டும், அதுவும் அடிப்படை சம்பளமாக அமைய வேண்டும் என பல்வேறு மட்டத்தில் வழியுறுத்தப்பட்டு வருகின்றது. 

இருப்பினும் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நழுவப்போவதில்லை என காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது தலைவரின் கடமை ஆகையால் சம்பள விடயத்தில் தொழிலாளர்களுக்கு சாதகமான பதில் இம்மாத இறுதிக்குள் கிட்டும், அதை நான் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment