வெள்ளப் பெருக்கு தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை! - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

வெள்ளப் பெருக்கு தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் ராஜாங்கணை நீர்த் தேக்கத்தை அண்மித்த தாழ் நிலப் பிரதேசங்களில் சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, கருவலகஸ்வெவ, வனாதவில்லுவ ஆகிய பிரதேச செயலகத்திற்கு சொந்தமான கலா ஒயாவின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும்.

குறிப்பிடத்தக்களவு மழை வீழ்ச்சி கலா ஒயாவின் நீரேந்து பிரதேசங்களில் பதிவாகியுள்ள நிலையில், ராஜாங்கணை நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இவ்வாறு சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ராஜாங்கணை நீர்த் தேக்கத்தின் தாழ் நிலப் பிரதேசங்களில் நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கலா ஓயாவினை பயன்படுத்துவது ஆபத்தானது என நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad