கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பெண் மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி - News View

Breaking

Post Top Ad

Saturday, January 2, 2021

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பெண் மருத்துவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

கொரோனா பாதிப்பை தடுக்க பைசர் தடுப்பூசி போட்டு கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் அரை மணி நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மெக்சிகோவில் வசித்து வரும் 32 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்த பெண் மருத்துவருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்ட அரை மணி நேரத்தில் தசை பலவீனம் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

இந்த பக்க விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவருக்கு என்செபலோமைலிட்டிஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. சிகிச்சையை அடுத்து அவரது நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

பிற மருந்துகளை எடுத்து கொள்ளும்பொழுது, அந்த பெண் மருத்துவருக்கு ஒவ்வாமை விளைவுகள் ஏற்பட்ட கடந்த கால அனுபவங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad