உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றையதினம் (4) உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடையத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துமாறும் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.

பொலிஸாரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாத மாணவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad