கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஆட்டுப்பட்டித்தெரு, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில், 60ஆவது தோட்டம் (ஹெட்டேவத்த) தோட்டப் பகுதியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து, கொட்டாஞ்சேனை, ஆட்டுப்ட்டித்தெரு ஆகிய பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment