மியன்மாரில் இருந்து அரிசி வாங்குகிறது பங்களாதேஷ் - News View

About Us

About Us

Breaking

Monday, January 25, 2021

மியன்மாரில் இருந்து அரிசி வாங்குகிறது பங்களாதேஷ்

ரொஹிங்கிய அகதிகள் தொடர்பான முறுகலுக்கு மத்தியில் மியன்மாரில் இருந்து 100,000 தொன் அரிசியை பங்களாதேஷ் வாங்கவுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளங்களால் வயல்கள் அழிந்த நிலையில் பங்களாதேஷில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு அரிசி விலையும் அதிகாரித்துள்ளது.

1 மில்லியனுக்கும் அதிகமான ரொஹிங்கிய அகதிகள் மியன்மாரில் இருந்து தெற்கு பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

மியன்மார் இராணுவத்தின் ஒடுக்குமுறையை அடுத்தே 2017 இல் பெரும்பாலான அகதிகள் இவ்வாறு தப்பி வந்துள்ளனர். இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஐ.நா விசாரணையாளர்கள், மியன்மார் இனப்படுகொலை நோக்குடன் செயற்பட்டதாக குற்றம் சாட்டினர்.

ஆண்டுதோறும் 35 மில்லியன் தொன் அரிசி உற்பத்தி செய்யும் பங்களாதேஷ் உலகின் மூன்றாவது அரிசி உற்பத்தி நாடாக இருந்தபோதும் வெள்ளம் அல்லது வரட்சியால் அங்கு அடிக்கடி அரிசி தட்டுப்பாடு ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment