தனியார் கல்வி வகுப்புகளை மீண்டும் தொடங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது - வைத்தியர் சுதத் சமரவீர - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

தனியார் கல்வி வகுப்புகளை மீண்டும் தொடங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது - வைத்தியர் சுதத் சமரவீர

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர், தனியார் கல்வி வகுப்புகளை மீண்டும் தொடங்க திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் வைத்தியர் நிபுணர் சுதத் சமரவீர, தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், உடனடியாக கடுமையான சுகாதார நெறிமுறைகளின் கீழ் தனியார் கல்வி வகுப்புகள் இயங்க அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மாணவர்கள் அல்லது ஆசிரியர்களிடையே எந்தவொரு பாதிக்கப்பட்ட நபரையும் உடனடியாக ஒரு சிகிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிகள் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று சமரவீர குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad