கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது திருகோணமலை நகரம் - News View

Breaking

Post Top Ad

Saturday, January 2, 2021

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது திருகோணமலை நகரம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை நகரம் முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மத்திய வீதியில் கொரோனா தொற்றாளர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த வீதியானது முடக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், நேற்றையதினம் ஒருவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரிசோதனையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மத்திய வீதி ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad