ஒரே சூலில் இரு கன்றுகளை ஈன்ற பசு - வழமைக்கு மாறான நிகழ்வு என தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, January 3, 2021

ஒரே சூலில் இரு கன்றுகளை ஈன்ற பசு - வழமைக்கு மாறான நிகழ்வு என தெரிவிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய ஆயித்தியமலை கிராமத்தில் வழமைக்கு மாறாக பசுவொன்று ஒரே சூலில் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது என அதன் பராமரிப்பாளர் தெரிவித்தார்.

ஆயித்தியமலை மணிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் சுதர்ஷி‪னி என்பவர் வளர்த்து வரும் பசுவே அவருக்கு இந்த அதிர்ஷ்டத்தைக் கொடுத்துள்ளது.‪

பசுவும் அதன் கன்றுகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் தான் அவற்றை மிக கவனமெடுத்துப் பராமரித்து வருவதாகவும் சுதர்ஷி‪னி மேலும் தெரிவித்தார்.

பசுக்கள் வழமையாக ஒரு சூலில் ஒரு கன்றுதான் ஈனும் என்றும் இரண்டு கன்றுகள் ஒரே சூலில் கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்வென்றும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாண்டின் முதலாம் திகதி நிகழ்ந்த இந்த அரிதான நிகழ்வை கிராம மக்களும் மாடு வளர்ப்பாளர்களும் அதிசயமாகப் பார்த்து வருவதாக அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad