அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும் - ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 24, 2021

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும் - ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை

அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பு 6 லட்சத்தை எட்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 2 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் அந்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் இன்று அமெரிக்கர்களுக்கு உணவு உதவி உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கும் சிறப்பு உத்தரவை ஜோ பைடன் பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவுகளை விரைவில் நிறைவேற்ற பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தரும்படி ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோ பைடன், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனாவால் ஏற்கனவே 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டும். மக்கள் பசியால் பாதிக்கப்படலாம். மக்கள் வெளியேற்றப்படுவதற்கான ஆபத்து உள்ளது. வேலை இழப்புகள் மீண்டும் அதிகரிக்கலாம். நாம் உடனடியாக செயல்பட வேண்டும். நாம் தேசிய அவசர நிலையில் உள்ளோம். தேசிய அவசர நிலையில் உள்ளது போல் நாம் செயல்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment