இறால் பிடிக்கச் சென்ற 2 பிள்ளைகளின் தந்தை முதலைக்கு பலி - மட்டக்களப்பில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 5, 2021

இறால் பிடிக்கச் சென்ற 2 பிள்ளைகளின் தந்தை முதலைக்கு பலி - மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய உப்போடை நீரோடையில் (களப்பு) இறால் பிடிப்பதில் ஈடுபட்ட ஒருவரை முதலை இழுத்துச் சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த நபரின் சடலம் அந்த பகுதியிலுள்ள கீரியோடை நீரோடையில் முதலைக்கடிக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிசார் தெரிவித்தனர்.

குமாரபுரம் புன்னைச்சோலையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய ஆரோக்கியநாதன் மரியதாஸன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

குறித்த நபர் வழமைபோல நேற்று திங்கட்கிழமை மாலை பெரிய உப்போடைக் களப்பு பகுதில் இறால் பிடிப்பதற்கு சென்று இரவாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து உறவினர்கள் அவரை தேடிய நிலையில் இன்று பகல் 3 மணியளவில் கிரியோடை நீரோடையில் முதலை கடித்து உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடரிபில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad