முகக் கவசம், சமூக இடைவெளியை பேணாத 2,823 பேர் கைது - 2,751 பேருக்கு எதிராக வழக்கு - News View

About Us

About Us

Breaking

Friday, January 29, 2021

முகக் கவசம், சமூக இடைவெளியை பேணாத 2,823 பேர் கைது - 2,751 பேருக்கு எதிராக வழக்கு

(செ.தேன்மொழி)

முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இதுவரையில் 2,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 2,751 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை பின்பற்றாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் , 2,823 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 2,751 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு மேல் மாகாணத்தில் நாளையும், நாளை மறுதினமும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றவுள்ளதுடன், அன்டிஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. 

இதன்போது மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல பயன்படுத்தப்படும் 11 இடங்களிலும், மேல் மாகாணத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலும் எழுமாறான அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, மேல் மாகாணத்தில் இயங்கி வரும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தொடர்பிலும் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

அதற்கமைய நாட்டின் எந்த பகுதிகளில் வசித்தாலும் முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சட்டவிதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment