2041 இல் இஸ்ரேலை இல்லாதொழிக்க ஈரான் பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

2041 இல் இஸ்ரேலை இல்லாதொழிக்க ஈரான் பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டது

20 ஆண்டுகளுக்குள் இஸ்ரேலை இல்லாதொழிப்பதற்கும் அமெரிக்க படைகளை பிராந்தியத்தில் இருந்து அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வதற்கும் ஈரான் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவால் ஈரான் குத்ஸ் படைத் தளபதி காசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்ட ஓர் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டியே 16 சரத்துகளுடன் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டிருப்பதாக ஈரானின் இஸ்னா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2041 மார்ச் மாதத்தில் இஸ்ரேலை அழித்து ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஈரான் அரசு மேற்கொள்ள இந்தப் பிரேரணை வலியுறுத்தியுள்ளது. 

அதேபோன்று இஸ்ரேல் முற்றுகையில் இருக்கும் காசா பகுதிக்கு அத்தியாவசியப் பொருட்களை கட்டணத்திற்கு அல்லது இலவசமாக அனுப்பவும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

2040 இல் இஸ்ரேலின் எதுவும் மிஞ்சாது என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் அலி கமனெய் பிரகடனம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. 

எனினும் இது சட்டமாவதற்கு ஈரான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெற வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment