விற்பனையாளரால் வந்த வினை : 109 பேருக்கு கொரோனா - 2 நகரங்களுக்கு சீல் வைத்த சீனா - News View

About Us

About Us

Breaking

Monday, January 18, 2021

விற்பனையாளரால் வந்த வினை : 109 பேருக்கு கொரோனா - 2 நகரங்களுக்கு சீல் வைத்த சீனா

விற்பனையாளர் (சேல்ஸ் மென்) ஒருவர் மூலம் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 2 நகரங்களுக்கு சீன அரசு சீல் வைத்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொடிய வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், தொடக்கத்தில் வைரஸ் வேகமாக பரவியபோதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி தங்கள் நாட்டில் வைரஸ் பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளது.

ஆனால், தற்போதும் மிகச்சிறிய எண்ணிக்கையில் அந்நாட்டில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் வைரஸ் பரவும் நகரங்களை சீல் வைத்து மக்கள் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு செல்வதை சீன அரசு தடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகிறது.

ஆனாலும், கடந்த சில நாட்களாக ஹூபேய் மாகாணத்தில் உள்ள 2 நகரங்களில் கொரோனா உறுதியானதால் அந்நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், சேல்ஸ் மென் ஒருவரால் மேலும் ஒரு மாகாணத்தில் வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஹீலாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த சேல்ஸ் மென் (விற்பனையாளர்) கடந்த சில நாட்களாக அண்டை மாகாணமான ஜிலின் மாகாணத்திற்கு பயணம் செய்துள்ளார்.

அங்கு 2 நகரகளுக்கு சென்ற அவர் பலத்தரப்பட்ட மக்களை சந்தித்து தான் விற்பனை செய்ய உள்ள பொருள் குறித்து விளக்கம் அளிப்பது பொருளை விற்பனை செய்வது தொடர்பான வேலை செய்துவந்துள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக அந்த சேல்ஸ் மென்னுக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது. வைரஸ் பரவியிருப்பது தெரியாமல் அந்த சேல்ஸ் மென் ஜிலின் மாகாணத்தில் உள்ள இரண்டு நகரங்களுக்கு சென்று பலதரப்பட்ட மக்களை சந்தித்துள்ளார்.

இறுதியாக, ஜிலின் மாகாணத்தில் 109 அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததை சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக நடந்த விசாரணையில் ஜிலின் நகருக்கு வந்து தான் பணியாற்றும் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ய வந்த அந்த செல்ஸ் மென்னால்தான் 109 கொரோனா பரவியுள்ளது என்பதை
சீன அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனால், வைரஸ் உறுதி செய்யப்பட்ட அனைவரையும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், ஜிலின் மாகாணத்தில் உள்ள இரண்டு நகரங்களையும் சீன அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த நகரங்களில் உள்ள மக்கள் தொகையினர் 1 கோடியே 25 லட்சம் பேர் தங்கள் வீடுகளிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 2 நகரங்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாக சீனாவில் 1 கோடியே 90 லட்சம் பேர் வீடுகளிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment